மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

12ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்!

12ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்!

பூமி கண்காணிப்பு செயற்கை கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட் வருகின்ற 12ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘அமேசோனியா’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் மற்றும் அதனுடன் 18 செயற்கை கோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், “இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2,268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை கோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 12ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14ஆவது ராக்கெட்டாகும்.

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கை கோள், அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கை கோளாகும். இது பூமியின் மேல்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10’ ராக்கெட்டில் முதன்முறையாக செயற்கை கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான ‘கவுன்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 7 ஆக 2021