மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

காலில் விழுந்த விஏஓ உதவியாளர்: விசாரணைக்கு உத்தரவு!

காலில் விழுந்த விஏஓ உதவியாளர்: விசாரணைக்கு உத்தரவு!

கோவை அருகே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில், விஏஓ உதவியாளர் தனிநபர் ஒருவரது காலில் விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபால்சாமி என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களைச் சரி பார்ப்பதற்காக நேற்று ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது கோபிநாத் கொண்டுவந்த ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் முறையான ஆவணங்களைக் கொண்டு வருமாறும் விஏஓ கலைச்செல்வி கூறினார்.

இதனால் விஏஓ கலைச்செல்விக்கும் கோபிநாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விஏஓ அலுவலகத்தில் கோபிநாத் சத்தம்போட்டுப் பேசவே உதவியாளர் முத்துசாமி இப்படிப் பேசக் கூடாது எனவும் முறையான ஆவணங்களை கொண்டு வருமாறும் கூறினார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த கோபிநாத், உதவியாளர் முத்துசாமியைக் கடுமையாகத் திட்டி எச்சரித்ததாகவும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முத்துசாமியை அவரது சாதியைச் சொல்லி, ஊரிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முத்துசாமி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் . இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில், கோபிநாத் முன்பு முத்துசாமி மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். பின்னர் கோபிநாத்தின் காலில் விழுந்து கதறி அழுகிறார். அப்போது விஏஓ கலைச்செல்வி, முத்துசாமியிடம் எழுந்திரிங்க அண்ணா என்று கூறுகிறார்.

முத்துசாமி காலில் விழுந்தும் அசையாமல் அமர்ந்திருக்கும் கோபிநாத் சிறிது நேரத்தில் மன்னித்துவிட்டேன் முத்து, உணர்ச்சி வசப்படாதே, என் மேலேயும் தவறு உள்ளது என்று கூறி தூக்கிவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால் இது சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்சினை இல்லை என்று விஏஓ கலைச்செல்வி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், விஏஓ அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதால், இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தவும், காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

-பிரியா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 7 ஆக 2021