மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: பாலக் கோதுமை பரோட்டா

கிச்சன் கீர்த்தனா: பாலக் கோதுமை பரோட்டா

‘உடம்புக்குக் கேடு’, ‘பைல்ஸ் வரும்’, ‘செரிமானம் ஆகாது’... என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனாலும் நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டாட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள். முட்டை முட்டையாக மாவை உருட்டி அடுக்கி வைத்துக்கொண்டு, எண்ணெயில் வழுக்கி வீசி விளையாடுகிற லாகவமென்ன... நான்கைந்து பரோட்டாக்களை அப்படியே வைத்து இரண்டு கைகளாலும் ‘பளார்’. ‘பளார்’ என அடித்து மென்மையாக்குகிற யுத்திதான் என்ன? இதெல்லாம் தற்போது நினைத்துப் பார்க்கக்கூடியதாக மாறிவிட்ட நிலையில் வீட்டிலிருந்தபடியே இந்த பாலக் கோதுமை பரோட்டா செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்

பாலக் கீரை - 250 கிராம்

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

ஓமம் - கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாலக் கீரையைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாதி கீரையை மசித்துக் கூழாக்கிக்கொள்ளவும். மீதி கீரையை அப்படியே வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு, ஓமம், நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, கீரைக்கூழ் மற்றும் சிறிதளவு தண்ணீர், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக உருட்டி நெய்விட்டு தட்டவும். இதில் நறுக்கிய பாலக் கீரையை வைத்து மடித்து பரோட்டா வடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: புரொக்கோலி கோதுமை பரோட்டா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 7 ஆக 2021