மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

ரயில்களில் ‘வை-பை’ வசதி ரத்து!

ரயில்களில் ‘வை-பை’ வசதி ரத்து!

செலவு அதிகம் என்பதால் ரயில்களில் வை-பை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ரயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக வை-பை வசதியை ஒன்றிய அரசு ஏற்படுத்தியது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அறிவித்த அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த நான்கு அல்லது நான்கரை ஆண்டுகளில் ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி முதற்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், ‘வை-பை தொழில்நுட்பம், அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதுடன், இதன் செலவும் குறைந்ததாக இல்லை. அத்துடன் இந்த வசதி மூலம் பயணிகளுக்குப் போதிய அலைவரிசை கிடைப்பதும் இல்லை. எனவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

ஆனால், ரயில் நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள வை-பை வசதி குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் வை-பை வசதியை ஏற்படுத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 6 ஆக 2021