மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

காட்டு செடி குச்சிகளில் மேசை, நாற்காலிகளை உருவாக்கும் ஆதிவாசிகள்!

காட்டு செடி குச்சிகளில் மேசை, நாற்காலிகளை உருவாக்கும் ஆதிவாசிகள்!

காட்டு செடிகளின் குச்சிகளைக் கொண்டு ஆதிவாசி மக்கள் மேசை, நாற்காலி உருவாக்கி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு நாயக்கர், இருளர், குரும்பர், பனியர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனத்தை சார்ந்து வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் வனத்தில் கிடக்கும் பொருட்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விவசாயம், கூலி வேலைக்கு செல்ல தொடங்கினர்.

இந்த நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் பல்வேறு பயிற்சிகள் பெற்று கைவினைப்பொருட்களை வடிவமைப்பதில் ஆதிவாசி மக்கள் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.

அதன்படி கூடலூர், முதுமலை பகுதியில் கணிசமாக வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்கள் பார்த்தீனியம், உன்னி போன்ற காட்டு செடிகள் மூலம் கிடைக்கக்கூடிய குச்சிகளைக் கொண்டு நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து வருகின்றனர்.

இது தவிர யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை வடிவமைக்கின்றனர். அந்தப் பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் வாழ்க்கை தரமும் மேம்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஆதிவாசி மக்கள், “காடுகளில் வளர்ந்து வீணாகும் செடிகளின் குச்சிகளில் இருந்து இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பது குறித்து தன்னார்வலர்கள் பயிற்சி அளித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை வெளிமார்க்கெட்டில் தன்னார்வ அமைப்பினர் விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலம் எங்களுக்கும் நியாயமான வருவாய் கிடைக்கிறது. சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குச்சிகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உள்ளூரில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வெள்ளி 6 ஆக 2021