மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

ஆகஸ்ட் 9 முதல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள்!

ஆகஸ்ட் 9 முதல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித் துறை இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்துள்ளது.

2020 மார்ச் மாதம் தொடங்கிய தொடர் ஊரடங்கு தற்போது ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 9க்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் உயர் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

-பிரியா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 6 ஆக 2021