மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

குழந்தைகளுக்கு கொரோனா: ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு!

குழந்தைகளுக்கு கொரோனா: ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு!

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் பரவலாக நிலவி வருகிறது. ஆகவே மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்காகத் தனி வார்டுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சேமிக்கும் வசதி ஆகியவற்றைத் தமிழக சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணி குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், எழும்பூரில் உள்ள குழந்தை சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் இயக்குனர், நேஷனல் ஹெல்த் மெஷின் இயக்குநர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிறுவன எம்டி, மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவை இயக்குநர், பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர், ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர், இந்தியக் குழந்தைகள் நலத் தமிழ்நாட்டுக் கிளை தலைவர், அதன் செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் நல செயலாளர் தங்கவேலு ஆகிய 13 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக்குழு ஆலோசனை வழங்கவுள்ளது.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

வெள்ளி 6 ஆக 2021