மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி கோதுமை பரோட்டா

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி கோதுமை பரோட்டா

‘தம்பி அதிகமா பரோட்டா சாப்பிடாதே! தம்பி நைட் நேரம் பரோட்டா சாப்பிடாதே! தம்பி மைதால செய்றது பரோட்டா, அதனால ஒழுங்கா செரிக்காது!’ - இப்படி யாரு நமக்கு அட்வைஸ் பண்ணினாலும் சரி, நம்ம விஜய் அண்ணன் சொல்ற மாதிரி ‘ஒருதடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்டா’ என்கிற நபர்களுக்கு இந்த புரொக்கோலி கோதுமை பரோட்டா ஹெல்த்தி சாய்ஸ்.

என்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

புரொக்கோலி - ஒரு கப்

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் கொதிக்கவிட்டு அதில் புரொக்கோலியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கி தண்ணீரை வடிகட்டவும். புரொக்கோலி பூக்களைச் சிறிதாக நறுக்கவும். ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், புரொக்கோலி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உலர்ந்த மாங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி, அதில் புரொக்கோலி மசாலா கலவையை வைத்துத் தட்டி வைத்துக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: உருளைக்கிழங்கு கோதுமை பரோட்டா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 6 ஆக 2021