மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரித் துறையில் மின்னணு முறையில் வரி செலுத்துபவர்களின் நலன் கருதி பல்வேறு படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவை வருகிற 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முந்தைய ஆண்டான 2020-2021ஆம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியால் செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்படும் வருமான அறிக்கை படிவம் எண்-64 டி மற்றும் 64-சி படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 5 ஆக 2021