மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

தமிழக பதிவுத் துறையில் ஜூலை மாத வருவாய் ரூ.1,242 கோடி!

தமிழக பதிவுத் துறையில் ஜூலை மாத வருவாய் ரூ.1,242 கோடி!

ஊரடங்கு காரணமாக பதிவுத் துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய் ஜூலை மாதத்தில் ரூ.1,242 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான உத்திகளைக் கையாண்டு வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பதிவுத் துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய், கடந்த மாதத்தில் ரூ.1242.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில் ரூ.1077.43, மே ரூ.233.89, ஜூன் ரூ.789.33, ஜூலை ரூ.1,242.22 கோடி வசூலாகி உள்ளது.

சமீபத்தில் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள பதிவுத் துறை அலுவலகங்களில் ஆய்வு நடத்திய பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “எங்கெங்கே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்களோ அந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறோம். பதிவுத் துறை அலுவலகத்தில் வேண்டியவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களின் பத்திரங்களை மட்டுமே பதிவு செய்கிறார்கள். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்தது. இதுபோல நடக்கக்கூடிய அலுவலகங்களில் ஆய்வு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல் ‘பதிவு அலுவலர்கள், துறை அலுவலகங்களில் உயர்ந்த மேடைகளில் அமர வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், அவர்களின் இருக்கையை வழக்கமான அலுவலகங்களில் இருப்பதை போலவே சமதளத்தில் அமைத்து, சுற்றியுள்ள தடுப்புகளை நீக்க வேண்டும்’ எனக் கூறி, அதன்படி உயர்ந்த மேடைகள் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 5 ஆக 2021