மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ்க்கு, ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தை அதிரவைத்த ஈமு கோழி ஊழல் வழக்குகளைக் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே ஜே.பி.ஆர் ஈமு அக்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் பத்மநாபன், ஜெயக்குமார், ராஜசேகர் ஆகிய மூவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 58 லட்சம் ரூபாய் அபராதமும் கோவை முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் தீரன் சின்னமலைப் பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 5) சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

தீரன் சின்னமலைப் பேரவைத் தலைவரான, சேலத்தைச் சேர்ந்த யுவராஜ், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த வாசு, பெருந்துறையை அடுத்த கருமாண்டி செல்லியம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ் நேசன் ஆகியோர் இணைந்து ’சுதி ஈமு கோழி’ என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்தத் திட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், அதற்குத் தேவையான தீவனம் அளித்து, கொட்டகை அமைத்துக் கொடுக்கப்படும். பராமரிப்புத் தொகையாக தலா 7,000 ரூபாய் 24 மாதங்களுக்கு வழங்கப்படும். இதுதவிர இரண்டு ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனர்.

இதிலும் விஐபி திட்டத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனமே ஆறு ஈமு கோழிகளைப் பராமரித்து முதலீட்டாளர்களுக்கு மாதம் 8000 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு 20,000 ரூபாய் அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு முதலீடு செய்த தொகை திருப்பி கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இவர்களை நம்பி மொத்தம் 121 பேர் 2.70 கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி , பணத்தை கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருச்செங்கோடு ,தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த, பழனிசாமி என்பவர் 2012 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2.47 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகாத தமிழ் நேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு யுவராஜ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வியாழன் 5 ஆக 2021