மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மக்களவையில் தகவல்!

நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மக்களவையில் தகவல்!

நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு விவகாரங்கள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன.

இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்படைந்தன. இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் ஒன்றில், ‘மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

யுஜிசியின் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதுதவிர, உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு பல்கலைக்கழகங்கள், டெல்லியில் ஏழு பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்கள், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருவதாக சமீபகாலங்களாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய தீவிர விசாரணையில் பல்கலைக்கழக மானியக் குழு ஈடுபட்டது . அதில் நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்தப் போலியான பல்கலைக்கழகங்களின் பட்டியலை தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, இந்தக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லாது என்றும் அறிவித்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

-ராஜ்

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

புதன் 4 ஆக 2021