மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே தொடங்கிவிட்டது. ‘ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் ஆரம்பம்’ என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் புக்கிங் ஆனது. மேலும், இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய ஸ்கூட்டர் வெளியீட்டு தேதியை பாவிஷ் அக்ரவால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து நிறங்களில் கிடைக்கிறது. அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என்றும் ஸ்கூட்டர்கள் நேரடியாக வாடிக்கையாளர் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

‘தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்’ எனும் பிராண்டில் வரவிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக். முழுக்க முழுக்க LED ஹெட்லைட்ஸ்தான் இதன் முதல் சிறப்பம்சம். அதிலும் இரட்டை புரொஜக்டர் இருக்கலாம். DRL–ம் எல்இடிதான். இதில் கார்களில் இருப்பதுபோல், கீலெஸ் என்ட்ரி இருக்கும். அதாவது சாவி இல்லாமலே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். ஓலா ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு, கனெக்ட் செய்து கொண்டால் போதும். மொபைல் மூலமே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம். ஸ்கூட்டரின் சீட்டில் அமர்ந்திருப்பது நீங்கள்தான் என்பதை ஸ்கூட்டரே கண்டறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் உண்டு. இதன் கன்சோலில் உள்ள டச் ஸ்க்ரீனில் மொபைலில் வரும் இன்கமிங் கால் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், நேவிகேஷன் சிஸ்டம், ரைடு மோடுகள், ஸ்கூட்டரின் ரேஞ்ச் விவரம், பேட்டரி விவரம் என எல்லாமே தெரியும். இதில் புளூடூத் கனெக்ட்டிவிட்டியும் உண்டு என்கிறார்கள்.

அலாய்வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் என்று சில முக்கியமான வசதிகளும் இருக்கின்றன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் உண்டு. இதன் சீட்டுக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வேறெந்த ஸ்கூட்டர்களிலும் இல்லை என்பது இதன் சிறப்பம்சம்.

இதன் டாப் ஸ்பீடு 95 கிமீ–க்குமேல் இருக்கும் என்கிறார்கள். அதேபோல் இதன் பிக்–அப்பும் நன்றாக இருக்கும் என்றே தெரிகிறது. வெறும் 4 விநாடிகளுக்குள் இது 40 கிமீ–யை எட்டிவிடுமாம். சிட்டிக்குள் ஓட்டுவதற்கு இந்த ஸ்கூட்டர் செம சாய்ஸாக இருக்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே சார்ஜிங்தான் பிரச்னை. அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறதாம் ஓலா. அதாவது, ஹைப்பர் சார்ஜர் என்றொரு ஆப்ஷனைச் சொல்கிறார்கள். இந்த ஹைப்பர் சார்ஜர் மூலம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்கிறார்கள். இந்தியா முழுக்க 400 நகரங்களில் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ இருக்கிறார்களாம்.

100 சதவிகிதம் சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை போகலாம் என்கிறார்கள். இது உண்மையாக இருந்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்தான்!

-ராஜ்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

புதன் 4 ஆக 2021