மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களில் கூடுதல் ‘ஏசி’ பெட்டிகள் இணைப்பு!

எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களில் கூடுதல் ‘ஏசி’ பெட்டிகள் இணைப்பு!

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை மற்றும் திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் மதுரை சிறப்பு ரயிலில் (எண்: 02638) வருகிற 23ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலில் (எண்: 02637) வருகிற 26ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரயிலில் (எண்: 06795) வருகிற 24ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயிலில் (எண்: 06796) வருகிற 26ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயிலில் (எண்: 02654) வருகிற 24ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரயிலில் (எண்:02653) வருகிற 25ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து ரயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகிறது.

இந்த நிலையில், “கோவிட் வைரஸ் இன்னும் நம்மைச் சுற்றி உள்ளது. சில மாநிலங்களில் அதன் தீவிரம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் பயணங்களைத் தவிர்க்கவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் பயணிப்பர். ரயில்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். அந்த வகையில் கோவிட்-19 பரவல் தடுக்கப்படும். இந்தியன் ரயில்வே, படிப்படியாகப் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது’’ என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவலைத் தடுக்கவும் இந்த ஏசி பெட்டிகளின் இணைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 4 ஆக 2021