மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தேர்வர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளத் தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பாரதி பர்வீன் பவார், திட்டமிட்டபடி முதுநிலை நீட் தேர்வு செப்டம்பர் 11ம் தேதியும் இளங்கலை நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியும் நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றித் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

புதன் 4 ஆக 2021