மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

கொரோனா சான்றிதழ் ஆவணமாகக் கருதப்படலாம்: தமிழிசை செளந்தரராஜன்

கொரோனா சான்றிதழ் ஆவணமாகக் கருதப்படலாம்: தமிழிசை செளந்தரராஜன்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வரும் காலத்தில் கல்வி, அரசு சலுகை உள்ளிட்டவைகளைப் பெறுவதற்கு ஆவணமாகக் கருதப்படலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியுடன் கொரோனா தொற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு அரசு எல்லா நிலைகளிலும் தயாராக உள்ளது.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் கேட்டுக்கொண்டதன்படி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி பசுமையான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 3) ஒரே நாளில் 75,000 மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் நடப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 7,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அதுபோன்று ஒரே நாளில் அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி மக்களையும், எதிர்கால சமுதாயத்தையும் காப்பாற்றுகிற ஆயுதம். வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும், கல்வி நிலையங்களில் சேர்வதற்கும் தடுப்பூசி சான்றிதழ் ஆவணமாகக் கருதப்படலாம். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அதற்கான சான்றிதழ்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மாநிலத்தில் குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் இருப்பார்கள் என்ற நிலை வந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை உள்ளிட்டவற்றை மூட வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 3 ஆக 2021