மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

அதிகரிக்கும் பெட்ரோல் பயன்பாடு!

அதிகரிக்கும் பெட்ரோல் பயன்பாடு!

கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்றும் இந்திய எண்ணெய் கழகத் தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு வாகன நடமாட்டம் குறைந்தது. இந்தியாவின் எரிபொருள் தேவை, நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது.

கடந்த மார்ச் மாதம், பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23 லட்சத்து 70,000 டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் அதிகம்.

“கொரோனாவுக்கு முன்பு, அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது.

கடந்த மாதம் 54 லட்சத்து 59,000 டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவிகிதம் அதிகம். ஆனால், 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவிகிதம் குறைவு. தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும்” என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார்.

விமானங்கள் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என்று தொடர்ந்து 18ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்து வாகனங்களின் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 3 ஆக 2021