மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள்: முதலிடம் பிடித்த மாவட்டம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள்: முதலிடம் பிடித்த மாவட்டம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. உள் மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியானது. சிபிஎஸ்இ இணையதளமான cbseresults.nic.in, cbse.gov.in ஆகியவற்றின் மூலமாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த 21.5 லட்சம் மாணவர்களில் 99.04 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதில் 99.99 சதவீத தேர்ச்சியைப் பெற்று கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூருவும் (99.96%), மூன்றாம் இடத்தில் சென்னையும் (99.94%) உள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது அதாவது 2020ல் 91.46 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021ல் 99.04சதவிகிதமாக உள்ளது. இதில் மாணவர்களை (98.89%) விட மாணவிகளே (99.24%) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் குறைந்தவுடன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 3 ஆக 2021