மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: மிளகு சீடை!

ரிலாக்ஸ் டைம்: மிளகு சீடை!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் ஆன்லைனில் வீட்டிலிருந்து படிக்கும் பிள்ளைகள் சலிப்பாக இருக்கும் நேரத்தில் எதையாவது சாப்பிட கேட்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் இந்த மிளகு சீடை கைகொடுக்கும். அவர்களை ரிலாக்ஸ் செய்யும்.

எப்படிச் செய்வது?

200 கிராம் பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். அரிசியில் லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். வெறும் வாணலியில் மாவை லேசாகச் சூடு வரும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் உடைந்த மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுந்து மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டிய சீடைகளைப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

சிறப்பு

எண்ணற்ற ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ பயன்களைக் கொண்டுள்ள மிளகு, அஜீரணம் மற்றும் வாய்வுக்கான ஒரு பாரம்பரிய மருந்தாக விளங்குகிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 3 ஆக 2021