மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி!

ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி!

மத்திய நிதியமைச்சகம் ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முடிந்த நிலையில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஜூலை மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1.16 (1,16,393) லட்சம் கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் 22,197 கோடி ரூபாய் எனவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 28,541 கோடி ரூபாய் எனவும், சர்வதேச ஜிஎஸ்டி 57,864 கோடி ரூபாய் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 27,900 கோடி ரூபாயையும் சேர்த்து) எனவும், செஸ் வருவாய் 7,790 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 92,849 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மே மாத வருவாய் 1.02 (1,02,709 ) லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 2 ஆக 2021