மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைத்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டு, தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் பத்து பேரில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் 57 சாட்சிகளிடம் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டு, 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பதாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 2) தீர்ப்புக்காக நீதிபதி அல்லி முன்பு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாதல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

வணங்காமுடி

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 2 ஆக 2021