மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மூன்றாவது வழக்கில் சிவசங்கர் பாபா கைது!

மூன்றாவது வழக்கில் சிவசங்கர் பாபா கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஏற்கனவே இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் அருகிலுள்ள சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியில் படித்த 18 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்கள் கொடுத்தனர். அதன்படி, சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது மூன்று போக்சோ வழக்குகளை பதிவு செய்தனர்.

சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள சொகுசு அறையிலிருந்து எடுக்கப்பட்ட பென்டிரைவ், சிடிக்கள், லேப்டாப் உள்ளிட்ட பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 5 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டு ஆசிரியைகள் தலைமறைவாகியுள்ள நிலையில் மூன்று ஆசிரியைகள் மட்டும் சிபிசிஐடி போலீசார் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதற்கிடையில் சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் மனு மற்றும் சிறையில் கூடுதல் வசதி கொண்ட முதல் அறையை ஒதுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்குகளில் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா,மூன்றாவது போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று(ஆகஸ்ட் 2) சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 2 ஆக 2021