மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 3.21 லட்சம் பேர் பயன்!

கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 3.21 லட்சம் பேர் பயன்!

தமிழ்நாட்டில் 'கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்' மூலம் 3,21,539 பேர் பயனடைந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கல்வித்திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற வயது வந்தோர் கல்வித் திட்டமானது, ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15,581 கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைத்து, தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன் கற்போர்களுக்கு 120 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசின் கல்வி தொலைகாட்சி வாயிலாகவும் கற்போர்களுக்கான கல்வி செயல்பாடுகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டத்தில் கல்வி கற்று வருவோருக்கு அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டு முகாம், 29.07.2021 முதல் 31.07.2021 வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இறுதி மதிப்பீட்டு முகாமில் 3,21,539 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவிலேயே, கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 3,21,539 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் மகளிர், பட்டியலின மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின்கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் விரைவில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 1 ஆக 2021