மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் நிறுத்தம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் நிறுத்தம்!

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதையடுத்து, தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது, ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. தொடர்ந்து ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட ஆக்சிஜன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடைகால மனு தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது. மேலும் ஆலையில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து நேற்று திமுக எம்பி கனிமொழி பேசும்போது, “உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை முழுமையாக வெளியே கொண்டு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்படும். தேர்தல் வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 ஆக 2021