மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை வரும்: ஆணையர்!

கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை வரும்: ஆணையர்!

தற்போதைய சூழலில் பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் மூன்றாவது அலை வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று(ஆகஸ்ட் 1) செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி,” கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். திருமணங்களில் சாப்பிடும்போதும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா மூன்றாவது அலை வரும். புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்கெட் தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கோயம்பேடு சந்தையை மூட வேண்டிய சூழல் இல்லை. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த காசி மேடு மீன் சந்தையில் மொத்த வியாபாரிகளை மட்டும் அனுதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்று கூறினார்.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

ஞாயிறு 1 ஆக 2021