மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதித்தால் அபராதம்!

உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதித்தால் அபராதம்!

சென்னையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று (ஜூலை 31) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை கூடுதல் தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாகத் தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யப்பட்ட 2,608 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை 2,21,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றாமல் 50 சதவிகிதத்துக்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்யவும், நீர்நிலைகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 1 ஆக 2021