மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது!

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது!

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின்னர் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுக்கடைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மது பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

ஞாயிறு 1 ஆக 2021