மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - WFH... உங்களுக்கான டயட் இது!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - WFH... உங்களுக்கான டயட் இது!

வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகவும் அதேநேரம் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்காமலும் வேலை செய்வதுதான் வொர்க் ஃப்ரம் ஹோமின் கான்செப்ட். ஆனால், அது தனக்கு வசதியான நேரத்தில், வசதியான இடத்தில், வசதியான உடையில், வசதியான உணவுகளோடு செய்கிற வேலை எனப் பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அதனாலேயே பலரும் தவறான உணவுப்பழக்கங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தபடியே அலுவலக டாஸ்க்குகளைச் சரியாக முடிக்க முடியுமா என்ற சவாலோடு, இந்தச் சூழலில் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற இன்னொரு சவாலும் சேர்ந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் காரணம் மனம்தான். அது உறுதியாக இருந்தால் ஒரு கிலோ எடையைக் கூட அதிகரிக்கவிடாமல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்

அரக்கபரக்க எழுந்திருக்கத் தேவையில்லை. வெந்ததையும் வேகாததையும் தின்ன வேண்டியதில்லை. நேரம் உங்கள் வசம் என்பதால் நினைத்த நேரத்துக்கு எழுந்திருப்பது, நினைத்த நேரத்துக்குச் சாப்பிடுவது என இருப்பீர்கள். இதைத் தவிருங்கள். நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த காலை உணவை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். இப்படிப்பட்ட காலை உணவு உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும் என்பதால், வேலைக்கிடையில் கண்டதையும் கொறிக்கத் தேடிப்போக மாட்டீர்கள். காலை உணவைத் தவறாமல் சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரிக்காமலிருக்கவும் உதவும். காலை உணவைத் தவிர்க்கும்போது உங்கள் வயிறு பசியால் ஒலியெழுப்பும். அதன் தொடர்ச்சியாக இனிப்பு சேர்த்த உணவுகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த வேளைகளில் உங்களையும் அறியாமல் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவீர்கள்.

காலை உணவுக்கு ஆரோக்கியமான ஆப்ஷன்ஸ்

* பருப்பு தோசையும் சட்னியும் சாம்பாரும்

* சிறுதானிய உப்புமாவும் சட்னியும்

* முட்டை

* தானியக் கலவை, மற்றும் பழங்கள்

* சத்துமாவுக் கஞ்சி

மதிய உணவை பேக் செய்யுங்கள்

ஆரோக்கியமான மதிய உணவுக்கான சாய்ஸ் என்னவென்று யோசியுங்கள். ‘வொர்க் ஃப்ரம் ஹோம்தானே... பரபரப்பில்லாமல் நிதானமாகச் சமைக்கலாம், சாப்பிடலாம்' என்ற எண்ணத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளைப் பற்றி யோசிக்காதீர்கள். மதிய உணவென்பது அன்றைய பொழுதுக்கான பெரிய, முக்கியமான உணவு என்பதால் வீட்டிலிருக்கும்போது நிறைய சாப்பிடச் சொல்லி, மனம் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம், ஜாக்கிரதை. முடிந்தால் உங்கள் லஞ்ச் பேக்கிலேயே உணவை வைத்துச் சாப்பிடலாம்.

மதிய உணவுக்கான ஆரோக்கிய ஆப்ஷன்ஸ்

* சாதம், பருப்பு, காய்கறிகள்

* கீரை மற்றும் பொரியல்

* பிசிபேளாபாத், பொரியல்

* புலாவ், ரைத்தா

* பிரியாணி, ரைத்தா

* சாதம், மிக்ஸ்டு வெஜிடபிள் கறி

டின்னரும் முக்கியம்

இரவு உணவுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப்போகும் வேளைதானே என ஏனோதானோ எனச் சாப்பிடாதீர்கள். மெனுவைத் திட்டமிடுவது முதல் காய்கறிகள் நறுக்குவதுவரை இரவு உணவுத் தயாரிப்பில் உங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

புதுமையான சமையல் முறைகளை (அதாவது அதிக நேரமெடுக்காமலும் அதே நேரம் ஆரோக்கியமானதாக இருக்கும்படியும்) முயற்சி செய்யுங்கள்.

அந்தந்த வாரத்துக்கான மெனுவைத் திட்டமிட்டு, அதைப் பின்பற்றுங்கள். இவற்றில் எதுவும் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது உங்கள் சாதுர்யம்.

டின்னருக்கான ஆரோக்கிய ஆப்ஷன்ஸ்

* ரொட்டியும் அசைவ கறியும்

* தோசையும் வெஜிடபிள் கறியும்

* புரதம் நிறைந்த உணவுடன் சூப்

இப்படியெல்லாம் இருப்பது சிறந்தது என இன்னும்கூட நிறைய ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் சொல்லலாம். ஆனால், முயற்சிகளை எடுக்க வேண்டியது நீங்கள்தான்!

நேற்றைய ரெசிப்பி: புளி இடியாப்பம்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 1 ஆக 2021