மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

சென்னையில் 9 அங்காடிகள் செயல்பட தடை!

சென்னையில் 9 அங்காடிகள் செயல்பட தடை!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 அங்காடிகள் இன்று முதல் செயல்பட அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி நேற்று(ஜூலை 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவை, ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை, ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலைகுறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை, ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள், அங்காடிகள் இன்று(ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9 காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை. மேலும், கொத்தவால் சாவடி மார்கெட் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 9 காலை 6மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி, காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளின்படி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 31 ஜூலை 2021