மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி : தமிழ்நாடு முதலிடம்!

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி : தமிழ்நாடு முதலிடம்!

நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக, வயது வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தொடர்ந்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இறுதியாக கர்ப்பிணிகளும் , பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று ஜூலை 2 ஆம் தேதி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நாட்டில் 2.27 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 78,838 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து, ஆந்திராவில் 34, 228 கர்ப்பிணிகளுக்கும், ஒடிசாவில் 29,821 கர்ப்பிணிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 21,842 கர்ப்பிணிகளுக்கும் கேரளாவில் 18,423 கர்ப்பிணிகளுக்கும், கர்நாடகாவில் 16,673 கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் மருத்துவர் விகே பால் கூறுகையில், “கொரோனா தொற்று பாதிப்பு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த நேரத்தில் அவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதுடன், வேறு சில பிரச்சினைகளும் ஏற்படக் கூடும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கர்ப்ப காலம் முடியாமல் பாதியிலேயே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலையை தடுக்க கர்ப்பிணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

சனி 31 ஜூலை 2021