மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது: நீதிபதிகள்!

நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது: நீதிபதிகள்!

பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; இனியும் நீர் நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், "மதுரை கற்பகநகர், சங்கர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் உயர்நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பு, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மயானங்களை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மேலும் மயானம் அமைக்கும் பகுதியானது புதுக்குளம் கண்மாய்.இதுபோன்று நீர்நிலைகளில் ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குளம் கண்மாய்க்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்டக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதனால், புதுக்குளம் கண்மாயில் அமைய உள்ள மின் மயானத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(ஜூலை 30) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வு விசாரித்தது. அப்போது, ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கண்டித்தனர்.

இதுகுறித்து பல்வேறு வழக்குகளில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மாற்றம் இல்லை. இந்த மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

சனி 31 ஜூலை 2021