மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

தமிழ் வழி கல்வி சான்றிதழை பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி உத்தரவு!

தமிழ் வழி கல்வி சான்றிதழை பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி உத்தரவு!

குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதியவர்களில் தமிழ் வழி கல்வி பயின்றோர் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகளில் தமிழ் வழி பயின்றோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று(ஜூலை 31) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு.

விண்ணப்பதாரர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்த தகவல், விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்விப் பயின்றதாகக் குறிப்பிட்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பாணையினை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

சனி 31 ஜூலை 2021