மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தொற்று அதிகம் பரவும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு உள்பட முக்கிய இடங்களில் உள்ள 9 அங்கன்வாடி கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. அதுபோன்று திருத்தணி முருகன் கோயிலிலும் 5 நாட்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்றின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். இதன்மூலம் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று(ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

கோயில் வளாகத்தில் தெப்ப உற்சவம் தொடர்பான நிகழ்வுகள் பக்தர்கள் இன்றி கடந்த ஆண்டு நடைபெற்றது போல் இந்த ஆண்டும் நடைபெறும்.

கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அனைத்தும் இணையதளத்திலும்,யூடியூப்பிலும் ஒளிபரப்பப்படும். மக்கள் வீட்டிலிருந்தே பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 31 ஜூலை 2021