மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு!

மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு!

மாணவிகளுக்கு குழந்தை திருமணம்,பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் வகுப்பின்போதும் மாணவிகளுக்கு ஆபாச படம், குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது பெற்றோர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இம்மாதிரியான சம்பவங்கள் குறையவில்லை.

அதுபோன்று தமிழ்நாட்டில் குழந்தை திருமணமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஊரடங்கில் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்துள்ளன. குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போர் மற்றும் உடன் இருப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் குழந்தை திருமணம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், மாணவிகள் நலன்குறித்து பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு கல்வி கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். தலா 10 மாணவிகளுக்கு ஓர் ஆசிரியை என பொறுப்பாளரை நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 31 ஜூலை 2021