மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

சிவகாசி: வெடி விபத்தில் ஒருவர் பலி!

சிவகாசி: வெடி விபத்தில் ஒருவர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர், சிவகாசி, சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பட்டாசு தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. அதேசமயம் அங்கு அடிக்கடி வெடி விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜாமீன் சல்வார்பட்டியில் சக்தி ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று வழக்கம்போல் வேலை நடைபெற்று கொண்டிருந்தது.

ஆனந்தராஜ் என்பவர் பட்டாசுக்குள் மருந்தை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில் சிக்கியவரின் உடல் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மாட்டிக் கொண்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் மேல் தொங்கிய உடலை போராடி மீட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 31 ஜூலை 2021