மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற இரண்டு குழுக்கள்!

கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற இரண்டு குழுக்கள்!

கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 2 குழுக்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி உட்பட சில கோயில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முறையான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவேண்டும் . இதற்கு முன்பு இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஜூலை 30) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மெதுவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 40,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு,கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 600 கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 30 ஜூலை 2021