மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

வீடுகள், குடியிருப்புகளின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு 40 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை (பகுதி II) மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதற்காக, 2022ஆம் ஆண்டுக்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தியை குடியிருப்பு துறையில் மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, ஒன்றிய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறுவுவதற்கு 40 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும். 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20 சதவிகிதம் மானியம் அளிக்கப்படும். குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள் / குழு வீடுகளின் சங்கங்களுக்கு பொதுவான மின்சார வசதிகளுக்கு பயன்படுத்துவதற்காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதான சூரிய சக்தி அமைப்பு முறைகளின் ஒட்டுமொத்த ஊக்குவிப்புக்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 30 ஜூலை 2021