மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சேலத்தில் குட்கா கடத்தி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்!

சேலத்தில் குட்கா கடத்தி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்!

பெங்களூரிலிருந்து சேலத்திற்கு மூன்று லாரிகளில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா,பான்பராக் பொருட்களை வாகன சோதனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் சுகாதாரத் துறை அமைச்சரும் விரைவில் தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் பயன்பாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, மாவட்ட அளவில் குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைத்து நேற்று(ஜூலை 29) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்.பி, வருவாய் அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூகநல ஆர்வலர் , மாவட்ட வணிக வரி அதிகாரி உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு, மாவட்டம் முழுவதும் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்நிலையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்ட மறுநாளே மூன்று லாரிகளில் கொண்டுவரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, அன்னதானபட்டி பகுதியில் நள்ளிரவில் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக மாட்டுத் தீவனங்கள் ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு லாரிகளை நிறுத்திய போலீசார் ஓட்டுநர்களிடம் விசாரித்தனர், ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரிகளில் இருந்த மாட்டுத்தீவன மூட்டைகளை பரிசோதனை செய்தனர். மாட்டுத்தீவன மூடைகளுக்கு அடியில் குட்கா பொருட்கள் மறைத்து கொண்டுவரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். 7.3 டன் அளவிலான ரூ.1.70 கோடி மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோன்று சேலம் அம்மாபேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியிலிருந்து மற்றொரு வேனுக்கு பார்சல் மூட்டைகள் இறக்கி கொண்டிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் லாரியில் 50 லட்சம் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் குட்கா, பான்பராக் கடத்தி வந்த 3 லாரிகள், ஒரு வேன் மற்றும் ரூ.2 கோடிக்கும் மேலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 30 ஜூலை 2021