மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா?

இருவேறு  கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா?

ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவையே புரட்டி போட்ட கொரோனா இரண்டாம் அலை தற்போது தணிந்து வருகிறது.இருப்பினும், மூன்றாவது அலை குறித்த அச்சமும் இருக்கிறது. கொரோனா வைரஸூக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். இந்தியாவில் தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

ஆரம்பத்தில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளினால் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனால், மக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தபோது போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் இல்லை. இது ஒரு பிரச்சினை என்றால்,மற்றொரு பக்கம் முதல் டோஸூக்கும், இரண்டாவது டோஸூக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் என்ற வரையறையும் விதிக்கப்பட்டது.

அதிலும் இரண்டு டோஸூம் ஒரே தடுப்பூசியைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் பின்விளைவு ஏற்படும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் இரண்டாவது டோஸை பலரால் போட்டு கொள்ளமுடியவில்லை.

ஆனால், தாய்லாந்து, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்தும் நடைமுறை உள்ளது. அதுபோன்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது, இருவேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதினால் பிரச்சினை எதுவும் இருக்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு முதல் டோஸ் கோவாக்சினும், இரண்டாவது டோஸ், கோவிஷீல்டும் போட்டு கொள்ளலாமா, அது பாதுகாப்பானதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பரிசோதனை வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். ஒரு குழுவுக்கு முதலில் கோவாக்சினும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டும் போடப்படும். மற்றொரு குழுவுக்கு முதலில் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மிக்ஸ்ட் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் நேரத்தில் இரண்டாவது டோஸ் மற்றும் கூடுதல் பூஸ்டர் டோஸூக்காக ஒரே தடுப்பூசியை நம்பி கொண்டிருக்க முடியாது என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் மிக்ஸ்ட் டோஸ் செலுத்தலாம் என்று கூறுகின்றனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 30 ஜூலை 2021