மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் அல்வா!

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் அல்வா!

தினமும் ஒரு பழம்; ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் என்பார்கள். வாரத்துக்கு ஒரு அல்வா புத்துணர்ச்சிக்கு உத்தரவாதம் எனலாம். இந்த ஆப்பிள் அல்வா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஓர் இனிப்பு வகை, மட்டுமல்ல; சுவையானதும் சத்தானதும் கூட.

எப்படிச் செய்வது?

அரை லிட்டர் பாலுடன் துளிகூட தண்ணீர் சேர்க்காமல் பால்கோவா பதத்துக்கு கெட்டியாகக் காய்ச்சவும். மூன்று ஆப்பிள்களைத் துருவவும். ஒரு தேங்காயில் இருந்து தேங்காயைப் பால் எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் கெட்டியான தேங்காய்ப்பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒரு கொதிவந்ததும் 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கலவை கெட்டியானவுடன் பால்கோவா, துருவிய ஆப்பிள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி ஆப்பிளில் உள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை ஆப்பிளில் இருப்பது கூடுதல் சிறப்பு.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 30 ஜூலை 2021