மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துதல் மற்றும் அவற்றை உறுதி செய்தல், மாணவர்களுக்கான பாடங்களைத் தயாரித்தல் ஆகிய பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் நேற்று (ஜூலை 29) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், "கல்வி தொலைக்காட்சி வாயிலாக மட்டுமில்லாமல், Google meet, Zoom, teams, whats app, Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.

மாணவர் சேர்க்கை, பள்ளி கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குதல், வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல், கல்வி தொலைக்காட்சியில் மாணவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு ஏற்றாற்போல அசைன்மென்ட் கொடுத்து மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேட்டில் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பணிக்கு வர வேண்டும்

மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய், சிறுநீரக நோய், இதய நோய் அறுவை சிகிச்சை செய்துள்ளோர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் ஆகியோர் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விலக்கு அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 30 ஜூலை 2021