மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

மதத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவது மனிதனே!

மதத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவது மனிதனே!

எந்த மதக்கடவுளும், சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டுங்கள் என்று கேட்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கொன்றில் கருத்து தெரிவித்துள்ளது.

தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுமனுவில், ‘‘சென்னை ஓட்டேரி பகுதியில் நடைப்பாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோயில் மற்றும் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 29) நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நடைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கோயில்களும், அதன் அருகிலே அனுமதி பெறாத கடைகளும் அதிகரித்து இருப்பதால், ஓட்டேரி செல்லப்பா சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்படுள்ளது என்று கூறியவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் புகைப்படங்களையும் தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ‘‘சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களைக் கட்ட வேண்டும் என்று எந்த மதக்கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை. ஆனாலும் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே’’ என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவிக்கும் ஓட்டேரி பகுதியில் சாலை, நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 30 ஜூலை 2021