மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

ஆன்லைன் சூதாட்டம்: பெற்றோரை ஏமாற்றிய மாணவனின் செயல்!

ஆன்லைன் சூதாட்டம்: பெற்றோரை ஏமாற்றிய மாணவனின் செயல்!

வங்கியில் பணம் எடுத்து வரச் சொன்ன பெற்றோரிடம் அந்தப் பணத்தை திருடன் வழிப்பறி செய்ததாக ஏமாற்றிய மாணவன், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது அம்பலமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவரிடம் அவரின் தாய், ‘மஞ்சள் விற்பனை செய்த பணம், ஒரு லட்சத்து 13,000 ரூபாய் அந்தியூரில் உள்ள வங்கிக் கணக்கில் வந்துள்ளது. வங்கிக்குச் சென்று அதை எடுத்து வா’ என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த மாணவர் வங்கிக்குச் செல்லாமல் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து தன் தாயிடம், ‘வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அப்போது அங்கு வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர், என்னிடம் இருந்த பணத்தைப் பறித்து சென்று விட்டார்’ என்று கூறினார். இதுபற்றி அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், கல்லூரி மாணவரை வங்கிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாணவர் வங்கியில் இருந்து பணம் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையின்போது, அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும், அதை சரிகட்ட இந்தப் பணம் தேவைப்படும் என்பதால் தனது தாயிடம் பணத்தை மர்ம நபர் வழிப்பறி செய்ததாக பொய் சொன்னதையும் ஒப்புக்கொண்டார்.

பொய்யான தகவலைக் கொடுத்து போலீஸாரையும், பெற்றோரையும் ஏமாற்றிய கல்லூரி மாணவரை போலீஸார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 30 ஜூலை 2021