மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: மிளகு - சீரக இடியாப்பம்

கிச்சன் கீர்த்தனா: மிளகு - சீரக இடியாப்பம்

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இடியாப்பம். எளிதில் செரிமானமாகும் என்பதால் இது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பாரம்பரிய உணவுகள் பலவும் மறைந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இடியாப்பமும் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த நிலையில் எளிதாகச் செய்யக்கூடிய மிளகு – சீரக இடியாப்பம் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

இடியாப்ப மாவு - 2 கப்

மிளகு, சீரகம் - தலா ஒரு டேபிள்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு கப் தண்ணீருடன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இடியாப்ப மாவுடன் சூடான நீர் சேர்த்துக் கிளறவும். மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லித் தட்டில் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வாணலியில் நெய்விட்டு மிளகு - சீரகத்தூள், பெருங்காயத்தூள், உதிர்த்த இடியாப்பம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: ரவா - ராகி சேமியா இட்லி!

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 30 ஜூலை 2021