மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: ரவா - ராகி சேமியா இட்லி!

கிச்சன் கீர்த்தனா: ரவா - ராகி சேமியா இட்லி!

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த உணவான இட்லி இன்று பல வடிவங்களை எடுத்துள்ளது. இட்லி தினம் கொண்டாடும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வகையில் சில நேரங்களில் விருந்தினர்களின் வருகையின்போது இட்லிக்கு மாவு அரைக்காத நிலையில் இந்த ரவா – ராகி சேமியா இட்லி கைகொடுக்கும்.

என்ன தேவை?

ராகி சேமியா - 2 கப்

ரவை, கெட்டித்தயிர் - தலா ஒரு கப்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

தோல் சீவி, நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய முந்திரித் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி ராகி சேமியா, ரவை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பிறகு மீதி நெய்யை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் தயிருடன் உப்பு, வறுத்த ராகி சேமியா, ரவை, தாளித்து வைத்த பொருள்கள், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து 2 மணி நேரம் ஊறவிடவும். மாவை இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: தயிர் இட்லி

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 29 ஜூலை 2021