மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ஊரடங்கு தளர்வு: வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு!

ஊரடங்கு தளர்வு: வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டதையடுத்து, புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 1.22 லட்சம் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக பதிவாகியுள்ளது எனப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,84,47,684 வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் வாகனங்களின் மீதான மோகம், மக்களிடத்தில் குறையவில்லை. இதன் விளைவாக புதிய வாகனங்களைப் பலரும் நாள்தோறும் வாங்கி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மாதந்தோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு வந்தன.

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. அதனால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வருவது தடுக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் இயங்கவில்லை. பிறகு கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை வழங்கியது. இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

முதலில் குறைவான அளவு மக்களே புதிய வாகனங்களை வாங்கினர். பிறகு இந்த மாதத்தின் தொடக்கம் முதல் புதிய வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் இது வரையில், தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 1,22,770 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடப்பாண்டில் 8,55,323 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கொரோனா பரவல் அதிகமாக இருந்த மே மாதத்தில் 23,190 வாகனங்களும், ஜூன் மாதத்தில் 56,477 வாகனங்களும் புதிதாக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்போதும் ஆடி மாதத்தில் புதிய வாகனங்களை வாங்குவோருக்கும், புத்தாடைகளை வாங்குவோருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக இத்தகைய கடைகள் இரண்டு மாதங்களாக இயங்காமல் இருந்தது. பிறகு தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்துதான், அவை மீண்டும் செயல்படுகின்றன.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் முந்தைய ஆண்டுகளைவிட பல்வேறு சலுகைகளைக் கூடுதலாக விற்பனை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில் வாகன விற்பனை ஷோரூம்களும் அடங்கும். இதன் காரணமாக தமிழகத்தில் புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 28 ஜூலை 2021