மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: தயிர் இட்லி

கிச்சன் கீர்த்தனா: தயிர் இட்லி

ஆரோக்கிய பண்புகள் நிறைந்த இட்லியை எல்லோராலும் எல்லா நேரத்திலும் சிறந்த தரத்தில் செய்துவிடுவது சற்று சிரமம்தான். அப்படிப்பட்ட நேரத்தில் ‘இதென்ன இட்லியா... அணுகுண்டா?’, ‘இந்த இட்லியைத் தூக்கி அடிச்சா மண்ட உடைஞ்சிடும் போலயே’ என்பன போன்ற டயலாக்குகள் காதில் விழும். அப்படியான நிலையில் இந்த வித்தியாசமான தயிர் இட்லி செய்து வீட்டிலுள்ளவர்களை மகிழ்விக்கலாம்.

என்ன தேவை?

இட்லி மாவு, தயிர் - தலா 2 கப்

கடுகு – கால் டீஸ்பூன்

கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க

தேங்காய்த் துருவல் - அரை கப்

பச்சை மிளகாய் - 2

உடைத்த முந்திரி - 6

எப்படிச் செய்வது?

இட்லி மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இட்லிகளைச் சிறிது நேரம் ஆறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் தயிருடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, தயிருடன் கலக்கவும். பிறகு இட்லிகளைத் தயிர்க்கலவையில் போட்டு, கொத்தமல்லித்தழை, கேரட் துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: மினி இட்லி வித் தேங்காய்ப் பொடி!

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 28 ஜூலை 2021