மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

செல்போன் பயன்பாடு: படிப்பதற்காக 10% மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்!

செல்போன் பயன்பாடு: படிப்பதற்காக 10% மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்!

பத்து சதவிகித மாணவர்கள் மட்டுமே செல்போனைப் படிப்பதற்காகப் பயன்படுத்துவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன.ஆனால், இதில் எந்தளவுக்கு மாணவர்கள் வகுப்பை கவனிக்கிறார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. நேரடி வகுப்புகளிலேயே கவன சிதறல் ஏற்படும்போது ஆன்லைன் வகுப்பில் சொல்லவே வேண்டாம். அதுவும் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை மாணவர்கள் மியூட் செய்வதால், அவர்கள் பாடத்தை கவனிக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் செய்கிறார்களா என்பது நமக்கு தெரியாது. ஒருசில மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பெரும்பாலானவர்கள் அட்டன்டென்ஸ் போடுவதற்காக வகுப்பில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பால் ஏற்படும் பாதிப்புகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 3,491 மாணவர்கள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

62.9 சதவிகித மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக தங்களது பெற்றோர்களின் செல்போனைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் வகுப்பின்போது 30.2 சதவிகித மாணவர்கள் தங்களுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனும், 19 சதவிகித மாணவர்கள் மடிக்கணினியும் பயன்படுத்துகின்றனர்.

இதில், 10.10 சதவிகித மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். 52.90 சதவிகிதம் பேர் வாட்ஸ்அப்பில் சாட் பண்ணவும், முகநூல் பயன்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். 31.90 சதவிகித மாணவர்கள் விளையாட்டிற்கும், 44.10 சதவிகித மாணவர்கள் பாட்டு கேட்பதற்கும், 3.50 சதவிகித மாணவர்கள் யூடியூப்பில் வீடியோ பார்ப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

10 வயது குழந்தைகளில் 37.8% பேர் முகநூலிலும் 24.3% பேர் இன்ஸ்டாகிராமிலும் கணக்கு வைத்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் ஆன்லைன் கல்வி மாணவர்களின் கற்றல் திறனை பாதித்துள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், அதற்கான நிலையான வழிகாட்டுதல்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

-வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

செவ்வாய் 27 ஜூலை 2021