மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

கொரோனா காலம்: சிகரெட் விற்பனை 33 சதவிகிதம் அதிகரிப்பு!

கொரோனா காலம்: சிகரெட் விற்பனை 33 சதவிகிதம் அதிகரிப்பு!

கொரோனா காலத்தில் பல்வேறு பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ள நிலையில் சிகரெட் விற்பனை மட்டும் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிகரெட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக ஐடிசி உள்ளது. இந்த நிறுவனம் சிகரெட் மட்டுமல்லாமல் வேகமாக விற்பனையாகும் சமையல் எண்ணெய், பிஸ்கெட் உள்ளிட்ட பல நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஹோட்டல் தொழில் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. அதாவது இது 28 சதவிகிதம் அதிகமாகும். மொத்தத்தில் ஐடிசி நிறுவனத்துக்கு ரூ.12,950 கோடி வருமானம் கிடைத்தது. வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்ட செலவுகள் போக ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது.

மேலும் கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை எப்போதோ எட்டி விட்டதாகவும், தொடர்ந்து வளர்ச்சியில் இருப்பதாகவும் ஐடிசி நிறுவனம் கூறி உள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் சிகரெட் விற்பனை மட்டுமே 33 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதாவது கடந்த காலாண்டில் ரூ.5,129 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. ரூ.3,280 கோடி லாபம் கிடைத்துள்ளது.

விற்பனை 33 சதவிகிதம் அதிகரித்து இருந்தாலும் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு என்றே அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதிவேக நுகர்வு பொருள் விற்பனையில் ரூ.173 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது. இதன் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

திங்கள் 26 ஜூலை 2021