மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

போலீஸ் உடற்தகுதித் தேர்வு: மைதானத்தில் உயிரிழந்த இளைஞர்!

போலீஸ் உடற்தகுதித் தேர்வு: மைதானத்தில் உயிரிழந்த இளைஞர்!

விருதுநகரில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்தாண்டு டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும், இரண்டு முறை உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக ஜூலை 26 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள 20 மையங்களில் உடற்தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. 10 நாள்களுக்கு இத்தேர்வு நடைபெறும்.

அதன்படி விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு போன்றவை நடைபெற்றன.

இந்த தேர்வில் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் கலந்து கொண்டார். உடல் தகுதித் தேர்வான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஓடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 26 ஜூலை 2021